பாப்பரசர் பிரான்சிஸ் அண்மையில் வெளிப்படுத்தியிருந்த கருத்தொன்றுடன் முரண்படும் விதமாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரெஞ்சு சஞ்சிகையான ஷார்லி எப்தோ மீது நடத்தப்பட்ட இஸ்லாமியவாத தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பாப்பரசர், ஒருவரின் தாயைப் பழித்து எவராவது பேசினால் அவருக்கு குத்து விழுவது சரியென்ற தொனிப்பட கூறியிருந்தார்.
மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு என்பது பாப்பரசரின் கருத்தாக அமைந்திருந்தது.
ஆனால், சுதந்திரமான சமூகத்தில் மற்றவர்களின் மத நம்பிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உரிமையும் ஒருவருக்கு என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறியுள்ளார்.
இன்னொருவருக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய செய்திகளையும் வெளியிடக்கூடிய உரிமை ஊடகத்துக்கு இருக்க வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து இயங்கும் சிபிஎஸ் ஊடகத்துக்கு கமெரன் கூறியுள்ளார்.
அதேநேரம் அவ்வாறான செய்திகள் சட்டத்துக்கு உட்பட்ட விதத்தில் அமைய வேண்டும் என்பதையும் பிரிட்டிஷ் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment