உடலின் ஒரு அரைப் பகுதி ஆணாகவும் மறு அரைப்பகுதி பெண்ணாகவுமுள்ள அதிசய வண்ணத்துப்பூச்சியொன்று அமெரிக்க டிரெக்ஸெல் பல்கலைக்கழகத்தின் தேசிய விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வண்ணத்துப்பூச்சியின் இடது இறக்கையானது ஆண் உயிரினத்துக்குரிய வடிவமைப்புகளை கொண்டுள்ளதுடன் வலது இறக்கை பெண் உயிரினத்துக்குரிய வடிவமைப்புகளை கொண்டமைந்துள்ளது.
இந்த அபூர்வ வண்ணத்துப்பூச்சி எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் டிரெக்ஸெல் தேசிய விஞ்ஞான அக்கடமியில் பொது மக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட வுள்ளது.
Social Buttons