இலங்கையின் போதைப்பொருள் வர்த்தக மன்னன் என வர்ணிக்கப்படும் வெலே சுதா பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு கொழும்பு மாவட்ட முன்னாள் அரசின் அமைச்சர் ஒருவருக்கும் தன்னுடைய வர்த்தகத்தில் தொடர்பு உள்ளதாக அவர் தகவல் தந்துள்ளதாக தெரிவித்துள்ளது பொலிஸ்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அவரது தொகுதியும் மைத்ரி வசம் வீழ்ந்த குறித்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் விபரங்கள் வெளியிடப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment