Latest News

January 31, 2015

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை
by Unknown - 0

புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் சிறுபான்மைமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ மெக்டொனாவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள போதிலும், நூறு நாள் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியுள்ளார் எனவும், இதனால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு மெய்யாகவே தீர்வு காண மைத்திரிபால விரும்புகின்றாரா என்பது பற்றி கேள்வி எழுப்பும் உரிமை மக்களுக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாரணைகளை உதாசீனம் செய்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுத் திட்டங்களையும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் வழங்கத் தவறினால் எவ்வாறான விளைவுளை எதிர்நோக்க நேரிடும் என்பதனை பிரித்தானிய தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »