கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் இடம்பெற்றது.
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.
அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவிதைகள் நம்பிக்கை தருவனவாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை தலைவர் கே.ரீ.கணேசலிங்கன், வணிக, முகாமைத்தவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
கவிஞர் பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட கு.வீரா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் என்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபல்யம் பெற்றிருந்தார்.
யுத்தத்தின் பின்னர் தடுப்பு முகாம் புனர்வாழ்வு என பல தடைகளையும் துன்பங்களையும் கடந்து வந்த கவிஞர் வீரா தற்போது தனது இரு கவிதை தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.
No comments
Post a Comment