Latest News

January 12, 2015

அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் தளத்தின் மீது இணைய தாக்குதல்!
by Unknown - 0

அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இணைய காலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும், ராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் யு ட்யூப் சானலும் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டிருக்கிறது. அதில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியில் " அமெரிக்க சிப்பாய்களே, நாங்கள் வருகிறோம், உங்கள் பின்புறத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தளம் இப்போது முடக்கப்பட்டிருக்கிறது.
« PREV
NEXT »