Latest News

January 22, 2015

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை- பிரிட்டன்
by Unknown - 0


இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் கிடையாது என பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்கள் தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் இன்னமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பட்டாளர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.
சுதந்திரமாக ஒன்று கூடுதல், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
« PREV
NEXT »