Latest News

January 23, 2015

த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது
by admin - 0

trisha wedding
Trisha Wedding
பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல் ‘மவுனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முன்னணி நாயகி
கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்துள்ளார்.
வருண் மணியன்
பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷாவுக்கு திடீரென திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண் மணியனை மணக்கிறார். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்', ‘காவியத்தலைவன்' படங்களை தயாரித்துள்ளார். தொழில் அதிபராகவும் இருக்கிறார்.
இன்று நிச்சயதார்த்தம்
த்ரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மோதிரம் மாற்றி...
நிகழ்ச்சியில் த்ரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். உறவினர்களுக்கு ருசியான விருந்தும் பரிமாறப்பட்டது.
நாளை விருந்து
தனது திருமண நிச்சயதார்த்ததுக்காக சக நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
நடிப்பு தொடரும்...
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடரப் போவதாக த்ரிஷா ஏற்கெனவே அறிவித்தது நினைவிருக்கலாம்.

« PREV
NEXT »