Latest News

January 23, 2015

சிறிலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் பதவியை இழந்தார் மஹிந்தவின் மைத்துனர்!
by admin - 0

மஹிந்த
nishantha Sri Lankan
இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகளால் அடிக்கடி குற்றஞ்சாட்டப்பட்டு வந்தபோதும் தொடர்ந்தும் அப்பதவியை தக்க வைத்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் நிசாந்த விக்ரமசிங்கவிடமிருந்து அப்பதவி பறிக்கப்பட்டு புதிய தலைவராக முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தலைவராகப் பணியாற்றிய அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது கூட்டில் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வந்த தொலைபேசி சேவை நிறுவனமொன்று விமானப் பயணச்சீட்டு வியாபாரத்தை முழுதாக கபளீகரம் செய்யும் வகையில் சிறிலங்கன் விமான சேவை நிர்ணய விலையிலும் குறைவாகவும் அதற்கு மேலதிகமாக இலவச தொலைபேசி சேவையும் வழங்கும் அனுமதியும் வழங்கப்பட்டு பல முகவர்  நிறுவனங்களுடனான உறவுகளும் முறிந்த நிலை தோன்றியிருந்ததோடு தன்னிச்சையான பல முடிவுகள் மூலம் விமான சேவையை நஷ்டத்தில் இயக்கிய இவர் குறித்து ஜே.வி.பி தலைவர் கடும் விசனம் வெளியிட்டு வந்ததுடன் அவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை சித்தியடையவில்லை என பகிரங்கமாக குற்றஞ்சுமத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »