Latest News

January 24, 2015

மீண்டும் இராணுவ குடியிருப்புக்கள் வாக்குறுதியை மீறிய புதிய அரசு
by admin - 0

வலிகாமம் வடக்கு
SLA Land
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.    அதனைத் தொடர்ந்து  சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு அமைக்கப்பட்டு அதன்மேல் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.  

 புதிதாக ஆட்சியினை கைப்பற்றியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசு வடமாகாணத்தில் படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கும் நிலையில், வலி,வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பும் ஆவலுடன் உள்ளனர்.    

மேலும் புதிய அரசு மீள்குடியேற்றம் தொடர்பிலான முழுமையான தகவல்களை தமக்கு தருமாறு கோரியதற்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேகரித்துவரும் மீள்குடியேற்றம் தொடர்பிலாக தகவல் சேகரிக்கும் நடவடிக்கைக்கும், மக்கள் ஆர்வத்துடன் தங்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.   

இந்த நிலையில் மீள்குடியேற்ற பிரச்சினையில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவக் குடியிருப்பு என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்தமையால் குறித்த பகுதி விடுவிக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது - 
« PREV
NEXT »