Latest News

January 24, 2015

13 போதும் கூட்டமைப்பு,ரணில், இந்தியா கூட்டுச்சதியா?
by admin - 0


இந்தியா
TNA
13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று எந்த தீர்வினையும் வழங்க வேண்டாம் என்று, இந்தியா கோரி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயத்துக்குத் தமிழ்த் தரப்பினரும் இணக்கம் வெளியிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 
தமிழர் தரப்பு என்று கூறியது கூட்டமைப்பைதான் ஆகவே தமிழர்களின் இத்தனை வருட போராட்டம் 13க்குத்தானா இந்தியாவை நம்பக்கூடாது என்பது இதற்குதான் கூட்டமைப்பிடம் இதற்கான விளக்கத்தை எதிர்பார்க்கப்படுகிறார்கள் தமிழ்மக்கள்.
« PREV
NEXT »