தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்புவது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறவுள்ளன.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இந்திய அரசாங்கத்தின் திணைக்களத் தலைவர்கள், உள்துறை அமைச்சின் அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவையின் அதிகாரிகள் என பலத்தரப்பினர் இதில் கலந்து கொள்கின்றனர்.
எனினும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு சரியான சூழ்நிலை உருவாகாத நிலையில் அவர்களை திருப்பி அனுப்ப கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment