Police |
13ம் திருத்தச் சட்டத்;தின் கீழ் காவற்துறை அதிகாரத்தை வழங்குவதில் மாத்திரமே சிக்கல் இருப்பதாக வெளியுறவு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கு பற்றிய கருத்து வழங்கியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அதன்படி இடம்பெறும்.
இந்த விடயத்தில் காணி அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை.
ஆனால் காவற்துறை அதிகாரத்தை வழங்குவதில் மாத்திரமே சிக்கல் இருக்கிறது என்று அவர் கூறினார்.
இதன் போது குறுக்கிட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில, 13ம் திருத்த சட்டத்தை அமுலாக்கினால் நாடு பிளவடையும் என்று கூறினார்.
இதனை மறுத்த பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதால் நாடு பிளவடையாது.
இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மாத்திரமான நாடு இல்லை.
தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தோல்வி அடைந்த பின்னர் ஹம்பாந்தொட்டையில் சென்று இனவாதத்தையே பேசினார்.
அவ்வாறான இனவாதமே நாட்டை பிளவடைய செய்யும் என்று கூறினார்.
Social Buttons