|
சந்திரிக்கா |
பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்ரிபால சிறிசேனவிடம் கட்சித் தலைமையைப் பொறுப்பளித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒதுங்கியிருக்கும் நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது நிலைப்பாட்டை மாற்றி சுதந்திரக் கட்சிக்கு சார்பாக மைத்ரிபால பிரச்சாரங்களில் ஈடுபட மாட்டர் எனும் நிலை தொடர்வதால் மீண்டும் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையை நாடி சுமார் 20 மூத்த உறுப்பினர்கள் ஆலோசனைகளை முன் வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் அவரை அணுகி அவரிடமே கட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான முயற்சியிலும் இக்குழு இயங்கி வருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபாலவும் இதற்கு இணக்கம் தெரிவிப்பார் எனவும் கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி அமையப்பெற்ற பின் சந்திரிக்கா பண்டாராநாயக்க முழுமையாக ஒதுக்கப்பட்டதாடு கட்சி உறுப்பினர்களோடு தொடர்பு வைக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons