Latest News

January 23, 2015

Microsoft Hololens பற்றிய பார்வை
by admin - 0

Microsoft Hololens
Microsoft Hololens
மைக்ரோசாப்ட் நிறுவனம் பல ஆண்டுகளாக தயாரித்து வந்த ப்ராஜக்ட் ஹாலோலென்ஸ் (microsoft hololens )எனப்படும் தலைகவசம் போன்ற கணினியை பற்றி தான் இங்கு பார்க்க போகின்றோம். ஹோலோலென்ஸ் என்றால் என்ன அது என்ன செய்யும் என்பதை தொடர்ந்து பாருங்கள்...

விண்டோஸ் 10 மூலம் இயங்கும் இந்த ஹோலோலென்ஸ் அதி நவீன கணினி தொழில்நுட்பம் மூலம் அதிக உங்கள் தினசரி வாழ்க்கையை எளிமையாக்கும்.

Microsoft
Microsoft Hololens

உங்கள் கற்பனை மற்றும் கருத்துக்களை ஹோலோகிராம்களாக அனுபவிக்க முடியும். உங்கள் டிஜிட்டல் வேலைகள் நிஜ வாழ்க்கையுடன் சேர்ந்து உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்

ஹாலோகிராம் மூலம் டிஜிட்டல் வடிவங்கள் நிஜ பொருட்களாக தெரியும். மேலும் பல்நோக்கு பறிமானங்களில் சிந்தக்க முடியும் என்பதோடு நம்பிக்கையுடன் முடிவெடுக்கவும் வேலைகளை சிறப்பாகவும் செய்ய முடியும்.

Microsoft Hololens

தொடுவதற்கு ஸ்கிரீன் மற்றும் க்ளிக் செய்ய மவுஸ் இல்லாமல் அசைவுகளின் மூலம் வடிவங்களை கொடுக்க முடியும், கண்களால் திருப்ப முடியும். செயளிகளை பயன்படுத்த குரல் கொடுத்தால் போதுமானது.

கற்பனையை கண் முன் கொண்டு வரும் இந்த லென்ஸ், நீங்கள் விரும்பும் பொருட்களை கண் முன் கொண்டு வர முடியும் என்பதோடு முப்பறிமான தோற்றத்தில் அவைகளை பார்க்க முடியும்.
« PREV
NEXT »