Latest News

January 18, 2015

சந்தர்ப்பவாத அரசியலும், மகிந்தவின் எதிர்காலமும் !!
by Unknown - 0

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நாடாளுமன்றத்தின் மொத்த முள்ள 225 அங்கத்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட அதா வது, 113 பேரின் ஆதரவைப் பெற்றுக்கொண்டாலே அவரது அமைச்சரவை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கமுடியும். ஆனால், தற்போது அவருக்குப் பெருகி வரும் ஆதரவைப் பார்க்கும் போது மூன்றில் இரண்டு பெரும் பான்மையை அவர் எட்டிப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வுடன் ஒட்டி யிருந்த பலரும் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமது ஆதர வைத் தெரிவித்து வருகின்றனர். தெற்கில் மட்டுமல்ல வடக்கு, கிழக்கு, மலையகத்திலும் இலங் கைத் தொழிலாளர் காங்கிர ஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈ.பி.டி.பியின் தலைவரும் முன்னாள் அமைச் சருமான டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப் புலிகள் இயக்கத் தின் முன்னாள் முக்கிய தள பதியும், பிரதியமைச்சருமான கருணா, பிரதியமைச்சர் ஹிஸ் புல்லா ஆகியோரும் இந்தப்பட்டி யலில் உள்ளடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவினால் அரசியல் ரீதியில் மட்டுமல்லாது தனிப் பட்ட ரீதியிலும் பயனடைந்து வந்த இவர்கள் தற்போது அவர் பதவி இழந்த நிலையில் உள்ள தால் புதிய உறவைத் தேடிச் சென்றுள்ளனர். சந்தர்ப்பவாத அரசியல் என்றால் என்னவென்று நாம் இவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களின் கடந்த காலச் செயற் பாடுகளை ஜனாதிபதி அறியாத வரல்ல. ஆனால், பெரும்பான் மையை நிரூபிப்பதற்கான இக்கட்டில் அவர் உள்ளதால் வருகிறவர்களையயல்லாம் வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் களை ஏப்ரல் மாதத்தில் நடத் தாமல் பிற்போடுவதற்கு ஜனா திபதியிடம் தற்போதுள்ள நிறை வேற்று அதிகாரங்களால் முடி யும். ஆனால், தாம் பதவியேற்ற நூறு நாட்களுக்குள் ஜனாதி பதியின் நிறைவேற்று அதிகாரங் களை நீக்கிவிடுவதாக அவர் வழங்கிய வாக்குறுதி இதற்குத் தடையாக நிற்கின்றது என் பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆனால், பல்வேறு இடங் களிலும் அவருக்கு வந்து குவி கின்ற ஆதரவைப் பார்க்கும் போது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு அதிக ஆதரவு கிடைக்குமென் பது தெளிவாகத் தெரிகின்றது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ அரசியலில் இருந்து விலகிப் போய்விடப் போவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின் றது.

இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு பெய ரளவில் மட்டுமே அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியயாருவர் பதவியில் இருக்கப்போகும் நிலை யில் மஹிந்தர் நாடாளுமன்ற அரசியலில் குதித்து பிரதமர் பதவியை ஈட்டிக்கொள்ள குறி வைத்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தென் பகுதி சிங்கள மக்களின் ஆதரவு மஹிந்தவுக்குப் பெருமளவில் கிடைத்துள்ளதை எவருமே மறுக்க முடியாது. தமிழ், முஸ்லிம் மக் களின் வாக்குகளே ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. ஆகவே, சிங்கள மக்களின் வாக்குகளைக் கொண்டே தாம் அதிக நாடாளு மன்ற தொகுதி களைக் கைப்பற்றி விடலாமென அவர் கணித்து வைத்துள்ளதில் தவறில்லை. ஆனால், தற்போதைய மாறுபட்ட சூழ்நிலை யைப் பார்க்கும்போது மஹிந்தரின் கனவு நனவாகு மெனக் கருத இயலாதுள்ளது.

குறிப்பாக அவரது ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் அவருக்குப் பெரும் தலையிடி யாக அமையப்போகின்றன.

மேலும் புதிய ஜனாதிபதி யின் 100நாள் வேலைத் திட்டத் தின் கீழ் அத்தியாவசியப் பொருட் களின் விலைகுறைப்பு, அரச ஊழியர்களுக்கான வேதன உயர்வு, எரிபொருள்களின் விலை குறைப்பு, வரிகளில் தளர்வு, முதியவர்கள் வங்கிகளில் இடும் வைப்புத்தொகைகளுக்கு அதி கரித்த வட்டி, கல்வித்துறையில் பெரிய சீர்திருத்தம், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை போன்ற மக்களைக் கவரக் கூடிய பல செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதால் மக்கள் புதிய ஜனாதிபதிக்கே தமது அமோக ஆதரவை நல்கு வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே, முன்னாள் ஜனாதிபதி யின் புதிய அரசியல் பிரவேசம் அவருக்கு அவர் எதிர்பார்க்கும் அளவுக்குச் சாதகமாக அமையப் போவதில்லை என்றே கூறலாம்.


« PREV
NEXT »