இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா தனது விஜயத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் உரையாற்றினார்.
இதன்போது தனது உரையில் இலங்கை தொடர்பிலும் குறிப்பொன்றை அவர் மேற்கொண்டார்.
"இந்த பிராந்தியத்தில் இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்தியா உதவ முடியுமெனவும் , அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்திய மற்றைய நாடுகளுக்கு உதவமுடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை தொடர்பிலும் தனது உரையில் குறிப்பிட்டமையானது ஒரு முக்கிய நிகழ்வு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Social Buttons