Latest News

January 26, 2015

ஒபாமாவின் இந்திய விஜயம் உணர்த்தும் செய்தி என்ன?
by Unknown - 0

இன்றைய தினம் புதுடில்லியில் இடம்பெறும் இந்தியா வின் 66ஆவது குடியரசு தின விழா நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிக்கின்றார். இதற்காக நேற்றைய தினம் இந்தியா வந்த ஒபாமாவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை ஆசி யாவை முதன்மைப்படுத்தியதாக மாற்றமடைந்துவரும் நிலையில், சீனாவின் செல்வாக்கு பிராந்தியத்தில் விரி வடைந்து செல்வதைத் தடுப்பதற்கு இந்தியாவின் வலு வான வகிபாகம் அவசியம் என்பதை நன்குணர்ந்ததன் விளைவாக இந்தியாவுடனான உறவுகளை வலுப் படுத்தவேண்டிய இன்றியமையாத தேவை அமெரிக்கா வுக்கு உண்டு. 21ஆம் நூற்றாண்டில் மிக உன்னதமான கைகோப்பாக இந்திய -அமெரிக்க உறவு அமையவேண் டும் என்ற எதிர்பார்ப்பை ஒபாமா பல தடவைகள் வெளிப் படுத்தியிருந்த நிலையில், அதற்கு வலுச்சேர்ப்பதாக இந்த விஜயம் அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

சம்பிரதாய வரைமுறைகளுக்கு விதிவிலக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே நேரில் சென்று அமெரிக்க ஜனாதிபதியை விமானநிலையத்தில் வரவேற்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய விஜயமானது பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது. பதவியிலிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியயாருவர் இந்தியாவுக்கு இரண்டாவது தடவையாக விஜயம் மேற் கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ள துடன், இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு அதிதி யாக அமெரிக்க ஜனாதிபதியயாருவர் அழைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் அமைந்திருக்கின்றது. 

அமெரிக்க – இந்திய உறவுகளில் ஏற்பட்டிருக்கும் வலுவான நெருக்கத்தைப் பறைசாற்றுவதாக ஒபாமாவின் விஜயம் அமைந்திருக்கின்றது. கடந்த ஒருவருட காலத்திற்கு முன் னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமை யான சோதனைகளுக்கு உட்பட்டிருந்த நிலையில் எவ ருமே இத்தகைய விரைவான மாற்றத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நியூயோர்க்கி லுள்ள இந்தியத் தூதரகத்தில் அதிகாரியாகக் கடமையாற் றிய தேவயானி கொப்ரகாடே தனது வீட்டுப் பணிப்பெண் ணுக்கு அமெரிக்க நியமங்களுக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை என்ற அடிப்படையில் விஸா மோசடி குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டமையையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பெரும் இராஜதந்திர இழுபறிநிலை தோற்றுவித்திருந்தது. இதனால் இருநாட்டு உறவுகளும் பெரும் விரிசலைச் சந்தித்திருந்தன.

கடந்த ஒரு தசாப்த காலத்திலேயே மிகவும் கீழ் மட்டத் திற்கு இரு நாடுகளது உறவுகளையும் வீழ்ச்சியடையச் செய்த இச்சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராகத் திகழ்ந்த நான்ஸி பவல் இராஜி நாமா செய்யும் நிலை ஏற்பட்டதாக அரசியல் அவதானிகள் அப்போது சுட்டிக்காட்டியிருந்தனர். இப்படி கீழ் மட்டத்தில் இருந்த உறவு ஒபாமாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய விஜயத்திற்கு வித்திடும் அளவுக்குப் பாரிய மாற்றம் கண்டுள்ளமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூரதரிசனமிக்க செயற்பாடுகளே காரணமாகும்.

இத்தனைக்கும் கடந்த மே மாதம் இடம்பெற்ற தேர் தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியீட்டும் வரையில் அமெரிக்காவால் வேண்டத்தகாத ஒரு நபராக அடையாளப்படுத்தப்பட்டிருந் தார். இதற்கு 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற குஜராத் கலவரத்திற்கு அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் வகிபாகத்தில் காணப்பட்ட சந்தேகங்களே அமெரிக்க அரசின் நிலைப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தன. மோடிக்கான அமெரிக்க விஸாவும் மறுக்கப்பட்டிருந்தது.

இப்படியிருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஒபாமா அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தார். கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு நரேந்திர மோடி ஒபாமாவின் அழைப்பை ஏற்றதுடன் கடந்த செப்டம்பரில் அமெரிக்கா விற்கு விஜயம் மேற்கொண்டபோது அவருக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.

தனது நாட்டு மக்களின் நன்மையை முதன்மையாகக் கொண்டு தூரதரிசனமிக்க தலைவர் தனது தனிப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து நடந்துகொண்டதன் விளைவா கக் குறுகிய காலத்திலேயே இந்திய – அமெரிக்க உறவு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வலுவானதாக அமைந்துவிட்டுள்ளது. ஒபாமாவின் விஜயம் இதற்குச் சான்று பகர்கின்றது.

இந்த முன்னுதாரணத்தைப் பாவித்து அமெரிக்கா உட்பட மேற்குலகுடன் கடந்த சில ஆண்டுகளாக மஹிந்த அரசின் காலத்தில் மோசமடைந்துவந்த உறவுகளை மீளக் கட்டியயழுப்பி நாட்டு மக்களுக்கு நன்மையைக் கொண்டு வர புதிய ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்.




(நன்றி சுடர் ஒளி )
« PREV
NEXT »