KARAINAKAR |
கடந்த 20 வருடங்களாக இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. பிரதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு காரைநகர் பஸ் டிப்போவில் நேற்று காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பையடுத்து புதிய பஸ் சேவையினை அவர் ஆரம்பித்து வைத்தார்.
இதேபோல் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி புதிய பஸ் சேவையொன்றை ஆரம்பிக்குமாறு இ.போ.ச.வின் வடமாகாண டிப்போக்களுக்கான பொறுப்பதிகாரியிடம் பிரதி அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைநகர் பஸ் டிப்போவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர்,
வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பருத்தித்துறை, காரைநகர் பஸ் டிப்போக்களை அபிவிருத்தி செய்வதற்கும் பஸ் சேவையினை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாவற்குழி 300 வீட்டுத்திட்டம் 2004 ஆம் ஆண்டு எனது கணவர் மகேஸ்வரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் இந்த வீட்டுத்திட்டத்துக்கான வசதிகள் எதனையும். செய்துகொடுக்கவில்லை. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் கூரைகளற்ற வாழ்வையே வாழ்ந்து வந்தனர். இவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
வடக்கில் பெண்கள், சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றன. காரைநகர் ஊரி பகுதியில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் பெற்றோரும் சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டியதும் அவசியமாகும் என்று தெரிவித்தார்.
Social Buttons