
ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் நேற்று ஊழல், மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக சூரியன் (ஹிரு) செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தானோ, தனது குடும்பத்தில் எவருமோ குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுப்பதனால் வேறு எந்த விடயங்களும் தொடர்புபடாமல் இருக்குமாயின் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.
ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது.
ஆனால், அதுபற்றி எங்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை.
நான் மனசாட்சிக்கு இணங்க எந்த குற்றச் செயலும் செய்யாத காரணத்தால், அதற்கு நேரடியாக முகம்கொடுக்க தயாராக இருக்கிறேன்.
எங்கள் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், அரசியல் செயற்பாடுகளை சீர்குழைக்கும் வகையிலும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
நாங்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல குற்றச்சாட்டுகள் இணையத்தளங்கள் ஊடாகவும் அரசியல் தரப்பினர் ஊடாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் முதல் மனிதராக இருந்த ஒருவரின் புதல்வராக இருக்கின்றமையின் பிரதிபலன்தான் இவை.
அதற்கு வேறொன்றும் மாற்றும்வழி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
(நன்றி HIRU news )
Social Buttons