சிறிலங்காவில் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கொடூரன் மகிந்தவை தோற்கடிக்க கூடிய எதிரணி வேட்ப்பாளருக்கு வாக்குகளை வழங்குவதே சிறந்தது என்பது எனது கருத்து. அதாவது மைதிரியும் நல்லவன் தமிழனுக்கு எதுவும் செய்வான் என்றோ நம்பமுடியாது ஆனால் மகிந்தவை பழிதீர்க்க மைதிரியை பயன்படுத்தலாம் . மகிந்தவின் கையாலே அவனது கண்ணை குத்துதளுக்கு ஒப்பானது.
தமிழர்கள் தங்களுக்கு ஒரு வேட்ப்பாளரை நிறுத்தியிருக்கலாம் ஆனால் அதை தற்போதைய தமிழ் தலைமைகள் கேட்கவில்லை.தற்பொழுது எங்களால் செய்யக்கூடியது மகிந்தவை பழி வேண்டுவதே ஒரு குறிக்கோள் அதற்கு எதிரணியை பவிப்போமே.
வடக்கு கிழக்கிலே பாதிப்படைந்த எமது மக்களின் எதிர்காலத்திற்காகவும் அவர்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவோ அல்லது இன்றுவரை பல்லாயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் விடுதலையின்றி இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழர் பகுதி எங்கும் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதோடு இராணுவப் புலனாய்வாளர்களதும் ஒட்டுக்குழுக்களதும் அட்டகாசங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது,மறுவாழ்வு அளிக்கப்பட்ட எமது முன்னாள் போராளிகள் தினமும் அச்சத்துடனேயே வாழ்வைக் கழிக்கின்றார்கள் இந்தநிலை மாற்றவோ வாக்களிக்கவில்லை ஏனென்றால் மைதிரியும் சிங்கள பேரினவாதியே அவர் இந்த நிலையை மாற்றுவார் என்பது கேள்விகுறி . அனால் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற இறுதி சந்தர்ப்பமாக இதை எடுத்து அதற்காக எமது வாக்குகளை பயன்படுத்துவோம்
எமது மண்ணில் எமது மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழவதற்க்கு . அதற்குமுதலில் முதல் எதிரியான மகிந்தவின் கொடூர ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடக் கூடாது.
மகிந்த பதவியில் இருக்கும்வரை அவர்மீது எவ்வித நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுவதை நாம் அனைவரும் கடந்த ஐந்து வருடங்களாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மகிந்தவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து . எமது இனத்தை கொன்று குவித்து மகிழ்ந்தவனுக்கு தக்க பதிலை தமிழர் புகட்டுவோம்
Social Buttons