Latest News

January 23, 2015

மன்னரைப் போன்று வாழ்ந்து மண்ணில் வீழ்த்தப்பட்ட மஹிந்த
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி யின் உத்தியோகபூர்வ வாசஸ்தல மாகப் பயன்படுத்தப்பட்ட அலரி மாளிகையைச் சுற்றிப் பார்த்த வர்கள் மூக்கின் மீது வைத்த விரல்களை எடுக்க முடியாத அளவுக்கு திகைப்பில் ஆழ்ந்து போய்விட்டனர். அதுவொரு ஜனநாயக நாட்டின் ஆட்சித் தலைவர் பயன்படுத்திய வாசஸ் தலமாகக் காட்சியளிக்கவில்லை. உலகின் மிகப்பெரிய பணக் காரர்களில் ஒருவராகத் திகழக் கூடிய அரபு நாடொன்றின் சுல் தான் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர மாளிகையாகவே அது காணப்பட்டது.

அரசராக வாழ்ந்த மஹிந்த

சுமார் 14 ஆண்டுகள் பிரதம ராகவும், ஜனாதிபதியாகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தி ருந்த மஹிந்தர், தம்மையயாரு அரசராகவே உண்மையில் மாற்றிக்கொண்டு வாழ்ந்ததை அலரி மாளிகையின் தற்போதைய நிலை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றது. அலரி மாளிகை யும் அதனோடு இணைந்த புதிய கட்டடங்களும் இந்த நாட்டின் முன்னாள் அரசுத் தலைவரின் இடாம்பீக வாழ்க்கைக்குச் சான் றுகளாகக் காணப்படுகின்றன. போர், அபிவிருத்தி ஆகிய இரண்டு மந்திரங்களையும் சொல்லிச் சொல்லியே மஹிந்தரும், அவ ரது குடும்பத்தினரும், அவரைச் சுற்றியிருந்தவர்களும் பெரும் செல்வத்தைக் குவிக்க முடிந் துள்ளது.

போர் ஓய்ந்ததால் வாய்ப்பு

நீண்ட காலம் தொடர்ந்து இடம்பெற்ற போர் ஓய்ந்தமை இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. இடம்பெயர்ந்த மக் களின் மீள்குடியமர்வு, புனர் வாழ்வு, அபிவிருத்தி என்று கூறி வெளிநாடுகளில் கையேந் திப் பெற்றுக்கொண்ட பெருந் தொகை நிதியின் கணிசமான பங்கு ஆளும் தரப்பினரால் ஏப் பம் விடப்பட, இந்த நாட்டின் சாதாரண ஏழை மக்கள் பசி யால் கொட்டாவி விடும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். நடை பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தர் வெற்றி பெற்றிருந்தால் அவர் இந்த நாட் டின் மன்னராகவே முடிசூடிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவ தற்கு ஒன்றுமில்லை.

ஊழல், மோசடி விசாரணைகள்

முன்னரெல்லாம் சர்வதேச – போர்க்குற்ற விசாரணையில் தம்மைச் சிக்கவைப்பதற்கு மேற்குலக நாடுகளும், புலம் பெயர்ந்த தமிழர்களும் முயன்று வருவதாகக் கூறிக் கூறியே சிங் கள மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கு முயன்ற மஹிந்த ராஜபக்­ தற்போது உள்ளூரில் இடம்பெறப்போகும் ஊழல், மோசடி விசாரணைகளுக்கு என்ன காரணத்தை முன்வைக் கப் போகிறார் என்பது தெரிய வில்லை. தோண்டத் தோண் டப் புதிது புதிதாக வெளிவரும் தகவல்கள் மஹிந்தரின் ஆட்சி யில் இடம்பெற்ற முறைகேடான விடயங்களை அம்பலப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, அவரது அரசில் செல்லப்பிள்ளையாக விளங்கிய முன்னாள் அமைச் சர் மேர்வின் சில்வா தற்போது மஹிந்தருக்கும் அவரது சகோ தரர்களான பஸில் ராஜபக்ஷ­, கோத்தபாய ராஜபக்­ ஆகி யோருக்கும் எதிராக குற்றப் புல னாய்வுத் திணைக்களத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில் படுகொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்கிரமதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நாடாளு மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பாரத லக்ஷ்மன் பிரே மச்சந்திர ஆகியோரின் படு கொலைகள் தொடர்பாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் தமது சகோதரர்கள் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்­ அறிந்திருந்த போதிலும் அது தொடர்பாக மெளனம் காத்துவந்ததாகவும் மேர்வின் பத்திரிகையாளர்களி டம் தெரிவித்தார்.

மேலும், படுகொலை செய் யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரே மச்சந்திரவின் புதல்வியும் மேல் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதிக்குத் தமது ஆதரவை வழங்கி வரு பவருமாகிய ஹிருணிகா தமது தந்தையின் கொலை தொடர் பாக எதையும் வெளியில் தெரி விக்காது தம்மை வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு முன் னாள் ஜனாதிபதி அதட்டிக் கூறிய தாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தமது பிள்ளை கள்,சகோதரர்கள் மீது நட வடிக்கை எடுக்கவேண்டாமென முன் னாள் ஜனாதிபதி புதிய ஜனாதி பதியிடம் வேண்டுகோள் விடுத் துள்ளதாகவும் செய்திகள் தெரி விக்கின்றன. அவ்வாறாயின் தமது ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும், தேர்தலின்போது முன்னைய அரசினால் மேற் கொள்ளப்பட்ட முறைகேடுகள், தேர்தலில் தோல்வி ஏற்படுமென் பதை அறிந்த பின்னர் முன் னாள் ஜனாதிபதியினால் மேற் கொண்டதாகக் கூறப்படும் சதி முயற்சிகள் ஆகியவை தொடர் பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென புதிய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஜனாதி பதி மைத்திரிபால இதை விரும் பாது விட்டாலும் ஐக்கிய தேசி யக் கட்சி இதிலிருந்து பின்வாங் காது என்பதைத் திடமாகக் கூற முடியும். மஹிந்தரின் ஆஸ்தான சோதிடர் கூடத் தாமே பிழையான வகையில் வழிநடத்தி முன் னாள் ஜனாதிபதியின் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளதாகக் கூறியுள் ளார். அது மட்டுல்லாது இந்தியா வின் உளவு அமைப்பான றோவின் கரங்கள் மஹிந்தரின் தோல்வியின் பின்னணியில் நீண்டிருந்ததாகவும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே, மஹிந்தரை ஆட்சியிலிருந்து நகர்த்துவதில் பலரும் ஆர்வம் காட்டியுள்ளமை தெரியவந்துள் ளது.

இதேவேளை, விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டு முன் னைய அரசின் ஊழல் மோசடி கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படு மெனவும் புதிய அரசின் சார் பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டாட்டத்தில் ஒட்டுக் கட்சிகள்

மஹிந்தரின் ஆட்சிக் காலத் தில் அவருடன் ஒட்டி உறவாடி பெரும் நன்மைகளை அனுப வித்துவந்த தமிழ் அரசியல்வாதி களின் நிலைதான் தற்போது பரிதாபகரமான கட்டத்தை எட்டி யுள்ளது. முன்னைய ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கு எதிராக வாயைத் திறப்பதற்கே பயந்து நடுநடுங்கிய மக்கள் புதிய ஜனா திபதி பதவியேற்றதன் பின்னர் தட்டிக்கேட்க துணிந்துள்ளதை சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி கிழக்கில் காணமுடிந் தது. அதில் இளைஞர்களுக்கு வெற் றியும் கிடைத்துள்ளது. புதிய ஜனா திபதிக்குத் தமது ஆதரவை வெளிப் படுத்துவதன் மூலமாகப் பதவிக ளைப் பெற்று மக்களை ஆட்டிப்படைக் கலாமென எண்ணியிருந்த சில ஒட்டுக் குழுவினர் ஏமாற்றமடைந்த நிலையில் தமது செயற்பாடு களை நிறுத்திக்கொண்டு ஒதுங்கி நிற்பதையும் காணமுடிகின்றது.

அதேசமயம்புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் னரே தெளிவானதொரு நிலை இலங்கை அரசியலில் தோன் றக்கூடும். இதனை மையப்படுத் திக் காய்களை நகர்த்துவதே தமிழர் தரப்பின் முக்கிய சவாலாக விளங்கப் போகின்றது. இதன் பின்னரே நாட்டின் உண்மை யான அரசியல் நிலை தென்பட ஆரம்பிக்கும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.






( நன்றி சுடர் ஒளி )
« PREV
NEXT »