Latest News

January 09, 2015

உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு காதலியை கரம்பிடிக்கும் கோஹ்லி
by Unknown - 0

உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

தற்போது அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்றுள்ள கோஹ்லியை பார்க்க அனுஷ்கா அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளிவந்தன. ஒரு பார்ட்டியில் கூட இருவரும் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகின. அதில் சக வீரர்களான இஷாந்த சர்மா, சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இருந்தனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
« PREV
NEXT »