Latest News

January 11, 2015

நாடாள இருந்தவனை காடாள அனுப்பிய ஜோதிடம்
by admin - 0

தமது ஜாதகத்தையே அறியாது சீரழிந்த ஜோதிடர்கள்..மகிந்தவுக்கு ஆப்பு வைத்த ஜோதிடம்


இலங்கையில் உள்ள அளவு ஜோதிடர்கள் இந்தியாவில் கூட இல்லை என்று சொல்லலாம் . தமது ஜோதிடம் தவறாது என்று கூறிக் கூறியே கடந்த தேர்தலில் வெறுமனே பொய்யை புழுகி விட்டார்கள் .

தன்னை மகா பெரும் ‘எதிர்வு கூறும் ஜோதிடர்’ என்று கூறிக்கொள்ளும் ஒருவர் ,மஹிந்தர் தோல்வி அடைந்தால் பகிரங்கமாக தீக்குளிக்கப் போவதாக ஊடகங்களூடாக பிரச்சாரம் பண்ணியவருக்கு தனது ஜாதகம் என்ன வென்றே தெரியாது என்பது தற்போது தெளிவாகி உள்ளது .

இதே போல் இன்னொரு ஜோதிடரும் மஹிந்தர் தோல்வி உற்றால் தனக்குத்தானே வேட்டு வைத்துக்கொள்வேன் என்று பிரச்சாரம் பண்ணி இருந்தார் .

இவ்வாறான அபூர்வ ஜோதிடர்கள் தேர்தலுக்கு முன் பல வகையான எதிர்வு கூறல்களை கூறி ஊடகங்களூடாக தன்னை பிரசித்தி படுத்திக்கொண்டு அப்பாவி மக்களிடம் ஆயிரக் கணக்கான ரூபாய்க்களை அறவிடுகிறார்கள் .

இவர்களை சந்திக்க முன்பதிவு அவசியம். இவர்களது முன்னறிவிப்புக்களில் ஏதாவது ஒன்று சரி உண்மை ஆகி உள்ளதா என்பது இது வரை தெரியவில்லை

ஜனாதிபதி தேர்தலில் முன்னோக்கி வந்த மைத்திரீபால சிறிசேன அவர்களுக்கு ‘சனித் தோஷம் ‘ உள்ளதால் அவருடைய வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்றும் இவர்கள் கூறினர் .

ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற சுனாமியின் நகர்வு இந்த ஜோதிடர்களுக்கு தென்பட வில்லை

காணாமல் போன விமானங்களுக்கு என்ன நடந்தது என்று கூறியவை அனைத்தும் பெரும் பொய்களே .

ஊடகங்களூடாக பிரபலமாகி பெரும் பணக்காரனாகிய இவர்களுள் இன்னொருவர் கண்ணை மூடிக் கொண்டே கதிர்காமக் கடவுள் மனிதர் முன் தோன்றும் நாளை எதிர்வு கூறினார்.இவருக்கு கடவுள் தொடர்புகள் ஏதேனும் இருக்கக் கூடும் என்றே சிலர் நம்பினர்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் அரசாங்கத்தை ஓட்ட முடியுமாக இருந்த நிலையிலேயே இந்த ஜோதிடர்களின் கயிற்றை விழுங்கி தேர்தல் நடாத்தப்பட்டது .

கடைசியில் நடந்தது என்ன ???

« PREV
NEXT »

No comments