ஜேர்மனியில் நடைபெற்ற ஹேக்கர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், ஐரோப்பாவை சேர்ந்த ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்துள்ளார்.
ஹேக்கர்கள் உலகில் ஸ்டார்பக் என அறியப்படும், ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஜான் கிறிஸ்லர், ஜேர்மனியில் நடைபெற்ற சோஸ் கம்ப்யூட்டர் கிளப் என்ற மாநாட்டில் தனது கண்டுபிடிப்பை பெருமையுடன் அரங்கேற்றியுள்ளார்.
ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வான் டே லேயேன் கைரேகையை தான் கிறிஸ்லர் நகலெடுத்து காட்டியுள்ளார்.
அதிலும் பொது வெளியில் இருக்கும் அமைச்சரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டே அவரது கைரேகையை நகலெடுத்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்களை கொண்டே கைரேகையை கிறிஸ்லர் தயார் செய்துவிட்டார்.
நவீன கமெராக்களின் செயல்திறன் மூலம் வெளிப்படும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்களை கொண்டும் வெரிஃபிங்கர் எனும் மென்பொருளை துணையாக கொண்டும் கைரேகையை சுட்டிருக்கிறார்.
ஒருவர் பயன்படுத்திய பொருள் மூலம் மட்டுமே கைரேகையை நகலெடுப்பது சாத்தியம் என கருதப்பட்டு வந்த நிலையில், பொது வெளியில் கிடைக்கும் புகைப்படங்கள் மூலமே ஒருவரின் கைரேகையை தயார் செய்ய முடியும் என்பது ஆச்சர்யமளிக்கிறது.
மேலும், இனி உலக தலைவர்கள் அனைவரும் பொது இடங்களில் கையுறைகளை அணிந்துதான் தோன்ற வேண்டியிருக்கும் என்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஹேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Buttons