கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வழங்காமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்றுமுன் நிமல் சிறிபால ,சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் நடந்த கலந்துரையாடலில் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கு ஒருவரை தெரிவி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு சில முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை புரன்ட் ரணர்ஸ் இடையே கடும் பேட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment