Latest News

January 27, 2015

பந்து நெஞ்சில்பட்டதால் மற்றுமொரு கிரிக்கெட் வீரர் சாவு
by Unknown - 0

பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரொருவர் பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்த சம்பவமொன்று கராச்சியில் இடம்பெற்றுள்ளது.

கராச்சியில் ஓரங்கி நகரில் இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் 18 வயதான ஷீசன் மொஹமட் என்ற வீரரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். 

இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலிய அணி வீர்ர் பிலிப்ஸ் ஹூக்ஸ் பந்து தலையில் பட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »