பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொது நலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இந்த வாரம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது இலங்கை - பிரிட்டனுக்குடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்தில் இடம்பெற்று வரும் விசாரணை செயற்பாடுகள் குறித்தும் இதன் போது பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.
Social Buttons