Latest News

January 16, 2015

மஹிந்தவின் தோல்வியும் சீனாவின் நிலைமையும்!
by Unknown - 0


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த வார தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிப்பவையாக அமைந்திருக்கும். 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த பின்னர் அவரே தென்னாசியாவின் பாதுகாப்பான நீண்ட காலம் நீடிக்கக்கூடிய தலைவர் எனக் கருதப்பட்டார். விடுதலைப் புலிகளை தோற்கடித்ததிற்கு அப்பால், பொருளாதர வளர்ச்சி, உல்லாசப்பயணிகள் வருகை, பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவை காணப்படும் தேசத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் முன்னாள் ஜனாதிபதியின் இலங்கைக்கான பாரிய திட்டங்களுக்கு தற்காலிக பின்னடைவை அளித்துள்ளது. அவரை விமர்சிப்பவர்கள் மஹிந்த ராஜபக்­ஷ அதிகளவிற்கு எதேச்சாதிகார போக்குடையவராகவும், ஊழல் மிகுந்தவராகவும், சீனாவின் பணம் மற்றும் அதிகாரம் காரணமாக அளவுக்கதிகமான சுகபோகியாகவும் மாறிவிட்டார் என்கின்ற னர்.

சீனாவைப் பொறுத்தவரை ராஜபக்­ஷவின் தோல்வி அதன் புதிய பட்டுப்பாதை திட்டத்தையும், பல உட்கட்டமைப்புத் திட்டங் களையும்,14 பில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்க திட்டமிடப் பட்டிருந்த போர்ட்சிட்டி திட்டத்தை யும் பாதித்துள்ளது.

ராஜபக்ஷ­ தனக்கு கீழ்ப்படி வதற்கு நன்றிக்கடனாக இலங்கையர்களுக்கு பொருளாதார வளம், சமாதானம் போன்ற வற்றை வழங்கினார். தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகாக்களும் நகர் புறத்தைச் சேர்ந்த சில உயர்வர்க் கத்தினரின் பொறாமையால் எழுந்த முனுமுனுப்பு என அலட்சியம் செய்தனர்.

மேலும் சீனாவின் ஆதரவு காரணமாக அவர் தொடர்ச்சியாக உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐ.நா விடுத்துவரும் வேண்டு கோள்களை நிராகரித்தார்.

எனினும், சீனாவின் விருப் பங்களுக்கு ஏற்ப செயற்படும் நாடு இலங்கை என்ற எண்ணத்தை சாதாரண இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. ஆசியாவின் மிக பழைய ஜனநாயகங்களில் ஒன்று என குறிப்பிடப்படும் இலங்கை நீண்ட கால குழப்பகரமான காலனித்துவ வரலாற்றையும் கொண்டது.

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடபோவதாக மைத்திரி பால சிறிசேன அறிவித்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்­ஷவின் அதிருப்தியடைந்திருந்த அவ ரது கூட்டணிக் கட்சிகள் பலவும் சிறிசேனவுடன் அணிசேர்ந்தன.

சிறிசேன மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியை தேர் தல் பிரசாரங்களில் பயன்படுத் தினார். வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் முதுகில் பாரிய கடன் சுமையைத் திணித்தமைக்காக அவர் ராஜபக்ஷ ­வை சாடினார்.

கிராமங்களை மையமாக வைத்து மக்களைக் கவரும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்த அவர், சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் உட்கட்ட மைப்புத் திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். போர்ட் சிட்டி திட்டத்தை இரத்துச்செய்யப் போவதாகவும் உறுதியளித்தார்.

வெள்ளையர்கள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி கைப்பற்றிய அந்த நிலத்தை தற்போது வெளிநாட்டவர்கள், சிலருக்கு இலஞ்சத்தை வழங்கிவிட்டு பெற்றுக்கொள்கின்றனர் என அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டார்.

சிறிசேனாவின் காலனித்துவ எதிர்ப்பு உரைகளும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியும், சிங்கள மக்களை மாத்திரம் கவரவில்லை, பொறுமையிழந்த தமிழ் சிறுபான்மையினரையும் கவரக்கூடியதாக காணப்பட்டது. அவர்கள் பெருமள வில் மைத்திரிபால சிறிசேன விற்கு வாக்களித்தனர்.

நடந்து முடிந்த தேர்தல் சீனாவின் பூகோள அரசியல் தந்திரோ பாயத்திற்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இலங்கை மக்களின் அரசியல் தீர்ப்பு சீனா வுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவே. சீனாவின் ஆதரவுடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ­ போன்றவர்களுக்கான எச்சரிக் கையயான்றையும் விடுத்துள்ளது.

சீனா உங்களுடைய அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங் குவதாக உறுதியளிக்கலாம். எனினும் உங்கள் தலைவிதியை இறுதியில் தீர்மானிப்பது உங்கள் மக்களே. துப்பாக்கி மூலமாகவோ அல்லது வாக்கு மூலமாகவோ அது தீர்மானிக்கப்படும். தனது தோல்வி உறுதியானதும் இராணுவத்தை தலையிடுமாறு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ­ வாக்குகள் மூலமாகவே தான் தோற்றார் என்பதை அதிஷ்டசமாகக் கருத வேண்டும்.

சுடர் ஒளி 
« PREV
NEXT »