Latest News

January 16, 2015

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் கேணல் கிட்டு உட்பட 9 மாவீரர்களின் நினைவு தினம்
by admin - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற கேணல் கிட்டு அண்ணா உட்பட 9 மாவீரர்களின் நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது பொதுச் சுடரினை சுபாகரன் அவர்கள் ஏற்றி வைக்க அவரைத்தொடர்ந்து ஈகைச்சுடரினை ரஜிநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆதரவர்கள் மலர் தூவி அகவணக்கமும் செலுத்தினார்கள்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு ராஐலிங்கம், பொது மக்கள் மற்றும் திரு சுபாகரன் ஆகியோர் கிட்டு அண்ணா அவர்களின் அரசியல் அனுபவங்கள் பற்றியும் மக்களுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
தமிழரின் ஒரே இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து செயற்படுவோம் என்றும் தாரக மந்திரமான "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது .









« PREV
NEXT »