Latest News

January 28, 2015

திஸ்ஸவுக்கு 7 வருட சிறை வரலாம் : மன்னிப்புக்கோரி எம்.பி. பதவியை துறப்பதற்கு இணக்கம்
by admin - 0

ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இருவரும் நாட்டை பிரிக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக போலியான ஆவணத்தை பகிரங்கப்படுத்திய முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்து போலி ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கப்படுத்தியதாக அவர்மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்ட ஒப்பந்தம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கையெழுத்து மோசடி தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியங்கள் சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டு, தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாகவும், அதன்மூலம் தனக்கு மன்னிப்பு வழங்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் திஸ்ஸ அத்தநாயக்க பேரம்பேசுவதற்கு தூது விட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா செய்யும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிறிதொருவரை நாடாளுமன்றுக்குள் உள்வாங்கும் சாத்தியம் உள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐ.தே.க. தேசியப்பட்டியல் மூலம் பராராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி அவரை கட்சியின் செயலாளராகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments