Latest News

January 05, 2015

மஹிந்த பக்கம் பாய்ந்த கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மீண்டும் வீடு திரும்பினர்!!
by admin - 0

மஹிந்த பக்கம் பாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் தப்பித்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடையாளம் தெரியாத இடமொன்றினில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் படை உயர்மட்ட அதிகாரிகளே தமக்கு அழுத்தங்களை தந்து மஹிந்தவை சந்திக்கவென அழைத்து செல்வதாக கொண்டு சென்றிருந்ததாகவும் தமது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரேயென இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

மஹிந்த தரப்புடன் இணைந்தால் அவர்களை கிராமத்திலிருந்து புறக்கணிக்கப்போவதாக கிராம அமைப்புக்கள் எச்சரித்தாக தெரியவருகின்றது.அத்துடன் புலம்பெயர்; உறவுகள் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர் உள்ளிட்ட பலரையும் தம்முடன் இணைத்து கொள்ள ஆளுநர் சந்திரசிறி தலைமையினில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் படுதோல்வியினில் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் TNA உறுப்பினர்கள் இருவர்

« PREV
NEXT »