ராசிரியர் தி. வேல்நம்பிக்கு தாய்லாந்தில் விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி பாங்கொக்கில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். பாண்டிச்சேரியைத் தலைமையமாகக் கொண்ட விஞ்ஞானிகள், அபிவிருத்தியாளர்கள், சர்வதேச பீடத்தின் மாநாடு பாங்கொக்கில் உள்ள ஹொலிடே இன் விடுதியில் அண்மையில் இடம்பெற்ற போது சிறந்த கல்விசார் பீடாதிபதி மற்றும் சிறந்த கல்வி சார் ஆய்வாளர் என்ற இரண்டு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவரை விட யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் பா. கண்ணன் சிறந்த விஞ்ஞானத்துறை ஆய்வாளர் விருதையும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தை சேர்ந்த இ. கஜானந்தன் சிறந்த மாணவனுக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
உலகளாவிய நிலையில் 74 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 9674 விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 27 பேர் மேற்கண்ட வகையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons