Latest News

January 20, 2015

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா!
by Unknown - 0

மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச இயக்கி வந்த மரணப்படைக்கு  அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 

ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்‌சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ள அவர், மூன்று கொலைகளுக்கு அவரே காரணம் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிலொன்று லசந்தவின் கொலை என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »