Latest News

January 04, 2015

யாருக்கும் வாக்களிக்கலாம்- 8ம் திகதியின் பின் எதிரணியில் மேர்வின்
by admin - 0


எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கிறிபத்கொட நகரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். 

மகிந்த ராஜபக்ஷ உன்னதமான மனிதர். அவரது குடும்பத்தினரே அவரை அழித்தனர். நான் 8 ஆம் திகதியின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வேன்.

வாக்குச் சாவடிகளுக்கு சென்று விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments