Latest News

January 08, 2015

யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30%
by admin - 0

யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.    யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.   இந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 20 வீத வாக்களும் , வவுனியா மாவட்டத்தில் 7மணி முதல் 11 மணிவரை 28 வீதமான வாக்குகளும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 மணி முதல் 10 மணிவரை  33 வீதமான வாக்குகளும் , மன்னார் மாவட்டத்தில் 7 மணி முதல் 10.30 மணிவரை 14 வீதமான வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 30 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். 
« PREV
NEXT »

No comments