Latest News

December 19, 2014

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக உள்ளுரில் விசாரணை- ஏமாற்றும் மைத்திரி
by Unknown - 0

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிரணி தரப்பிலான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்றை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், அதற்குப் பதிலாக உள்ளூரில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்காகப் பங்களிப்பு செய்த எவரையும், சர்வதேச விசாரணையொன்றின் பாதிப்புக்கு உட்படாத வகையில் பாதுகாப்பேன் என்றும் கூறியிருக்கின்றார்.
எதிரணியினரின் சார்பில் பொது வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதும், 100 நாள் திட்டம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி பொறுப்பு கூறவல்ல நாடாளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்குவேன் என சூளுரைத்திருக்கின்றார்.
‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை எவ்வாறு இல்லாதொழிப்பது, ஜனாதிபதி ஆட்சியை எப்படி இல்லாமல் செய்வது, 100 நாள் திட்டத்தின் பின்னர், நாட்டின் ஆட்சி முறை என்ன, 100 நாட்களின் பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள என்னுடைய றிலைப்பாடு என்ன என்று மக்கள் மனங்களில் எழுந்துள்ள பலதரப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருக்கின்றது.
இந்த நாட்டில் பலமற்ற நாடாளுமன்றமே இருக்கின்றது. குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் இங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை எற்பட்டிருக்கின்றது. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்’ என்று பொது வேட்பாளர் தமது தேர்தல் விஞ்ஞபானம் குறித்து கருத்துரைத்த போது தெரிவித்திருக்கின்றார்.
« PREV
NEXT »