Latest News

December 30, 2014

வங்காளதேச போர்க்குற்ற வழக்கில் மூத்த அரசியல் தலைவருக்கு மரண தண்டனை
by admin - 0

வங்காளதேச போர்க்குற்ற வழக்கில் மூத்த அரசியல் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வருகிறது.

அந்த வகையில், விடுதலைப் போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் ஏ.டி.எம். அசருல் இஸ்லாம் என்பவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

62 வயதான இவர், விடுதலைப் போரின்போது வங்காள தேசத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், மைனாரிட்டியாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்களை கடத்தி கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதவிர கற்பழிப்பு, கடத்தல் சித்ரவதை என மொத்தம் 6 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் 5 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சாகும்வரை தூக்கிலிடும்படி நீதிபதி தீர்ப்பளித்தார்.

போர்க்குற்ற வழக்கில் சர்வதேச தீர்ப்பாயத்தால் தண்டனை பெற்ற 16-வது நபர் அசருல் இஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments