Latest News

December 08, 2014

திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் தரப்பில் அதிர்ச்சியில் உறைந்துள்ள சிரிகொத்த…..
by admin - 0


இரண்டாம் இணைப்பு 

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு  வழங்குவதற்காக ஆளும் தரப்பில் இணைந்துகொண்டார் 

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு  வழங்குவதற்காக ஆளும் தரப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை அல்லது நாளைய தினம் இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பிரபலம் சிலரிடம் இது தொடர்பாக வினவியபோது இன்று காலை முதல் திஸ்ஸ அததனாயக்கவின் தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தி பரப்பரப்பாக உலாவருவதாகவும் அவர்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தனர்.சற்று முன் கிடைத்த தகவலின் படி திஸ்ஸ அத்தநாயக்க  தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கட்சித்தலைவர் ரணிலிடம் கையளித்துள்ளதாக உத்தியூகபூர்வ தகவல் எமக்கு கிடைத்து.

குறித்த ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பிரபலங்களின் பதில்களை நோக்கும் போது குறித்தகட்சித்தாவல் ஊர்ஜிதமாகலாம் எனவும் தெரிகிறது.இவர் தவிர ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்த்ராணி  பண்டாரவும் ஜோசப் மைக்கல் பெரேராவும் ஆளும் தரப்பில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

« PREV
NEXT »

No comments