ஈழத்தமிழர்களின் அவர்களின் அரசியல் விருப்பினை அறியும் கருத்தறியும் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற இரண்டாம் நாள் அமர்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணையின் முடிவுகளை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் , தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கும் வகையில் கையாள்வதென்றும், அதனை அனைத்துலக பீடங்களின் உறுதுணையுடன் பொதுசன வாக்கெடுப்பு நோக்கிக் கொண்டு செல்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து நேரடியாக இந்த அமர்பில் பங்கெடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுப்பிரதி பேராசிரியிர் மணிவண்ணன் அவர்கள் , இது தொடர்பில் விரிவான ஆய்வுரையொன்றினை சபையில் முன்வைத்திருந்தார்.
அனைத்துலக மட்டத்தில் பொதுசன வாக்கெடுப்பு குறித்தான கருத்துருவாக்கினை ஏற்படுத்துவது இச் செயற்பாட்டின் முக்கியமான விடயம் என பேசப்பட்டிருந்தது.
பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மத்தியில் ஓர் பொதுகருத்தொற்றையினை காண்பது மற்றும் இலங்கையின் வட மாகாணசபையில் பொதுசன வாக்கெடுப்பு குறித்தான ஒர் தீர்மானத்தினை கொண்டுவரு ஊக்குவிப்பது தொடர்பிலும் கருத்துப்பரிமாறப்பட்டது.
குறிப்பாக சிறிலங்கா 6வது அரசியல் அமைப்பு சட்டம், தமிழர்கள் தங்கள் தங்களின் அரசியல் பெருவிப்பினை வெளிப்படையாக முன்வைக்க மறுக்கின்ற நிலையில், தங்களின் அரசியல் பெருப்பினை வெளிப்படுத்த பொதுசன வாக்கெடுப்பெனும் விடயத்தினை வெளிக்கொணருவது முக்கியம் என குறித்துரைக்கப்பட்;டிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது 2015ம் ஆண்டுக்கான முதன்மை வேலைத்திட்டங்களின் ஒன்றாக பொதுசன வாக்கெடுப்பு விவகாரத்தினை கையில் எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
Social Buttons