Latest News

December 24, 2014

ஆயுத கட்டுப்பாட்டுக்கான ஐநா ஒப்பந்தம் அமலுக்கு வந்தது!
by Unknown - 0

உலக அளவில் ஆயுத விற்பனையைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்று இன்று புதன்கிழமை முதல்அமலுக்கு வந்திருக்கிறது. ஆயுதப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக இந்த சட்டத்தை ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார்.
பயங்கரவாதிகள், மனித உரிமை மீறுவோர் மற்றும் கிரிமினல்களின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று சேருவதை தடுக்க இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்று பான்கி மூன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஐநா மன்றத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமானது உலக அளவில் நடக்கும் சுமார் 85,000 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் 130 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் பாதி நாடுகளே இந்த சட்டத்தை தத்தம் நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் வழங்கியுள்ளன. அமெரிக்காவும் இதற்கு தனது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை. சிரியா, இரான் வடகொரியா ஆகிய நாடுகள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.
« PREV
NEXT »