ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Social Buttons