Latest News

December 22, 2014

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டின் வேலைத்திடம் தொடர்பான கூட்டம்
by Unknown - 0

நாடு கடந்த தமிழீழ அரசின் 2015 ஆம் ஆண்டிற்க்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று இன்று லண்டன் நாடு கடந்த தமிழீழ அரசின் அலுவலகத்தில் நடைபெற்று இருந்தது. இக் கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஊடக வியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பான மேலதீக விபரங்கள்...

நாடு கடந்த அரசாங்கம் 2015

நாடு கடந்த அரசாங்கமானது எதிவரும் 2015 ஆம் ஆண்டில் இருந்து காத்திரமான சில வேலைத்திடன்களை வடிவமைத்து செயல்படுவதற்காக பிரதமர் பணிமனை தொடச்சியாக பல செயலமர்வுகளை கடந்த வாரங்களாக மேற்கொண்டு வந்துள்ளது. 

இச் செயலமர்வுகள் ஊடக சில வேலைத்திடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது .இத் திட்டங்கள் சில அமைச்சுகள் மற்றும் மையங்கள் ஊடாகவும் வேறு சில பிரதமர் பணிமனை ஊடாகவும் நடைமுறைப்படுத்தப்படும் .

அடையாளம் காணப்பட்ட திட்டங்கள்

1, பதிப்பகம் - ஆவணக் காப்பகம் 
2,மக்கள் வாக்கெடுப்பு பரப்புரை இயக்கம்-சுகந்திர தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு 
3, நிலக் கபளிகரத் தடுப்பு இயக்கம்-நில ஆக்கிரமிப்புக்கான தடுப்பு திட்டங்கள்
4, தமிழ் மொழி கல்வி மதியுரைபீடம் 
5, தமிழ் diaspora பல்கலைகழகம் 
6, மாவீரர் நினைவாலையங்கள்.
7, உலகத் தமிழர் வணிக சம்மேளனம் 
8, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையப் பணிமனைகள் - சென்னை -புதுடில்லி 
9, உலகத் தமிழர் நல்லெண்ண தூதுவர்கள் 
10, தாயக சுயதொழில் மேம்பாட்டு திட்டம் 
11, இயற்கையை காப்போம்-தமிழீழத்தின் இயற்கை வழங்களை பாதுகாப்பு தொடர்பானது.
12, மனித உரிமை பீடம் 
13, தமிழ் அகதிகள் நலன்பேன் தொடர்பகங்கள் 
14, பெருவிழாக்கள் - போட்டிகள் 









« PREV
NEXT »