Latest News

December 09, 2014

பரபரப்பில் இலங்கை கைமாறும் கறுப்பு பணமும் கட்சி தாவல்களும்
by admin - 0

அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சின் அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட கோப்புக்கள் மற்றும் முக்கிய ஆவனங்களை எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதனால் இவர்கள் இருவரும் எதிரணிக்கு மாறுவது நடைபெறலாம் அது இன்று நடைபெறும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது 


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சரவையில் இருந்து மேலும் இரு அமைச்சர்கள் கட்சிதாவவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சுக்களில் தமக்கு தேவையான கோப்புக்கள் மற்றும் முக்கிய ஆவனங்கள் தொடர்பில் அதிகமுக்கியத்துவம் கொடுத்து தயார்படுத்திவருகின்றனர்.

இவர்களின் இந்த செயல் அரசைவிட்டு விலகி எதிரணியுடன்  இணைவதற்கான முனைப்பாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 
 
அண்மையில் அமைச்சர் ஜீவன், ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், 

ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பொது வேட்பாளருடன் இணைந்துள்ளனர்.  இதனால் அமைச்சர் ஜீவனும் ஓர் இரு தினங்களில் எதிரணியுடன் கை கோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு வந்த மேர்வின் சில்வா கடந்த சில வாரங்களாக அரசுக்கு முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments