வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கின் இராணுவ முகாம்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்படும் என அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் பிழையானது.
அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது பிழையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ உடன்படிக்கையிலோ 50 வீதம் இராணுவ முகாம்கள் வடக்கில் குறைக்கப்படும் என உறுதியளிக்கப்படவில்லை.
அரசாங்கம் பிழையானதும் பொய்யானதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டே பொலிஸ் அரங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட உடன்படிக்கையில் வடக்கில் 50 வீத இராணுவ முகாம்கள் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
Social Buttons