ந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார்கள். அதற்கு உதாரணம், கிங் பான்சா (King Bansah).
இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும், பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள்.
இவர் ஒரு மார்டன் அரசர். நவீன யுகத்தில் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொடர்பைக் கொண்டு, ஜெர்மனியில் உட்கார்ந்தபடியே தன் ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்.
62 வயது கிங் பான்சா, ஜெர்மனியில் இருந்தபடியே... கானாவில் உள்ள ஹொஹோய் (Hohoe) பகுதியில் வசிக்கும் 2 லட்சம் மக்களின் பிரச்னைகளை 'ஸ்கைப்' மூலம் தீர்த்துவைக்கிறார்.
சிறு வயதில் படிப்புக்காக ஜெர்மனி சென்ற பான்சா, ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
1987-ல் ஹொஹோய்க்கு ராஜாவாக இருந்த பான்சாவின் தாத்தா இறந்ததால், இவர் அரசர் ஆனார். தன் ராஜ் ஜியத்தை ஸ்கைப்பில் இணைத்துக்கோண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்புகள் சொல்லுவதும், உத் தரவுகளைப் பிறப்பிப்பதுமாக பிஸியாக உள்ளார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஹொ ஹோய்க்குச் சென்று வருகிறார், இந்த மாடர்ன் கிங்.
No comments
Post a Comment