மாவீரர் தினம் கடந்த மாதம் 27ம் திகதி உலகில் பல நாடுகளில் நினைவு கூரப்பட்ட நிலையில் யாழ்.குடாநாட்டில் வீதிகள் சந்திகள் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு இயல்பு வாழ்வு சீர்குலைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்படும் தீபம், இம்முறை ஏற்றப்படாது என பலர் நம்பியிருந்த நிலையில் திடீரென மாணவர்கள் ஏற்றினர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தினால் படையினர் பெரிதும் ஆத்திரமடைந்திருந்த நிலையில் நேற்றய தினமும் இன்றைய தினமும் படையினர் மற்றும் புலனாய்வாளர்களினால் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும், குறித்த நாளில் பல்கலைக்கழக வாயில் காவலாளியாக இருந்தவரும் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
எனினும் குறித்த விசாரணை தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியில் கூற மறுத்துள்ளதுடன், தம் உயிருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றனர்.இதனால் பல்கலையில் பதற்றமான பயம் காணப்படுகிறது
No comments
Post a Comment