நாளைய தினம் நான்கு ஆளும்தரப்பு உறுப்பினர்கள் பொது வேட்பாளர் அணியில் இணைந்துகொள்ள உள்ளதாக மைத்ரி அணியில் இருந்து கிடைக்கும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளை ஊடக மாநாடு ஒன்றில் நான்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அரசில் இணைந்துகொள்ளும் செய்தி வெளிடப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று களுத்துரை மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசார மேடையில் கருத்துவெளியிட்ட பொதுவேட்பாளர் மைத்ரிபால சிரிசேன தற்போது ஆளும் தரப்பை விட்டு வெளியேறியவர்கள் அரைவாசிபேர் மட்டுமே இன்னும் பத்து நாட்களுக்குள் மிகிதமுள்ளவர்கள் எமோடு இணைந்துகொள்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆளும் தரப்பில் உள்ள 90 % உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டார்கள் அவர்கள் மவுனமாக இருந்து எனது வெற்றியை உறுதிசெய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
No comments
Post a Comment