ஊடகவியலாளர் சுரங்க ராஜநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை(30) தாக்குதலுக்குள்ளான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சுரங்க ராஜநாயக்க தெரிவித்துள்ளதாவது, கம்பளை, குருந்துவத்தையில் எதரிணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்றபோது முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை தலைமையாக கொண்ட ஜனநாயக கட்சியின் மத்திய மாகாண சபை உருப்பினர் சன்னகலபதியின் வாகனம் தாக்கதலுக்கு உள்ளாகி சேதமாகியுள்ளதாக அறிந்தேன்.
அச்செய்தியை சேகரிக்கப்பதற்காக வாகனம் விபத்துக்குள்ளான இடத்துக்கு சென்றபோது ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல பிரசன்னமாகியிருந்தார். அப்போது அவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் கம்பளை வைத்தியசாலையில் இருக்கின்றனர் அங்கு வருமாறு கூறினார்.
நான் வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு சன்னகலபதியின் வாகன சாரதி நின்று கொண்டிருந்தார். விபத்து தொடர்பாக வாகன சாரதியிடம் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சற்று பொறுங்கள் நானும் சாரதியும் கலந்துரையாடிவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றோம் என்றார்.
பின் இருவருமாக கலந்துரையாடிவிட்டு என்னிடம் வந்து நாங்கள் கூறும் பெயர், ஊர் அடங்களாக செய்தி வெளியிட வேண்டும் என்றனர். எனக்கு சம்பவம் தொடர்பான விடயங்களை மாத்திரம் தாருங்கள். குறித்த நபர்கள் தொடர்பான விடயங்கள் விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னரே போடமுடியும். ஊர்ஜிதப்படுத்தப்படாமல் போட்டால் அது எங்களது ஊடக நிறுவனங்களுக்குதான் பிரச்சனை என்று கூறும் போதே சன்னகலபதியின் மகன் என்னை தாக்கினால்;. அவரது மனைவியும் ஒளிப்பதிவு செய்ய விடாமல் எனது கெமராவை தடுத்தார்.
இந்த தாக்குதலினால் எனது கை,கழுத்து பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனது கெமராக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. நான் எனது மனைவி பிள்ளைகளுடன் நகரத்துக்கு பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற வேளையிலேயே அவர்களின் முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சுரங்க ராஜநாயக்கவை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் பார்வையிட்டார்.
No comments
Post a Comment