Latest News

November 15, 2014

ஜனவரி 8 இல் ஜனாதிபதித் தேர்தல்
by admin - 0


ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவு இன்னும் மூன்று நாளுக்குள் எடுக்கப்படும் என  இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர்  டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.   இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதம் 8ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானைத்துள்ளதாக தெரியவருகிறது.   அதனை கருத்திற் கொண்டே தேர்தல் திணைக்களம் பணிகளை முன்னெடுக்குமாறு உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு தேர்த் திணைக்களத்திலிருந்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதியின் இரண்டாவது தவணைக்குரிய பதவிக் காலம் எதிர்வரும் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி முடிவடைகிறது.   ஆனாலும் நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதித்  தேர்தலை  நடத்தப்படலாம் என்பதன் அடிப்படையில் எதிர்வரும் 19ம் திகதியுடன் இரண்டாவது தவணைக் காலத்தை ஜனாதிபதி மகிந்த முடித்துக் கொண்டு தேர்தலை நடத்தவுள்ளார். 
« PREV
NEXT »